Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/12/2025
திண்டுக்கல்: தமிழ்நாட்டின் புகழ் பெற்ற முருகன் கோயில்களுள் ஒன்றும், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்களை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டு, அது பக்தர்களால் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் உண்டியல்கள் விரைவாக நிறைந்தது. இதையடுத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.4 கோடியே 77 லட்சத்து 87ஆயிரத்து 447 கிடைத்துள்ளது. தங்கம் 1323 கிராமும், வெள்ளி 17ஆயிரத்து 671 கிராமும் கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 2748-யும் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த முறை உண்டியல் எண்ணும் பணியில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் என மேற்பார்வையில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Category

🗞
News
Transcript
00:00Music
00:08Music
00:12Music
00:14Music
00:20Music
00:23Music

Recommended