Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/23/2025
திண்டுக்கல்: நத்தம் அருகே நத்தமாடிபட்டியில் இன்று (மார்ச் 30) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நேரில் கண்டு ரசித்தனர்.S.U.அருண் குமார் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் - துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகிய 'வீர தீர சூரன்' (Veera Dheera Sooran) திரைப்படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த 27 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில், இன்று (மார்ச் 30) திண்டுக்கல், நத்தம் அருகே நத்தமாடிபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் வருகை தந்தனர். தொடர்ந்து, பார்வையாளர்களோடு கேலரியில் அமர்ந்து வீரர்களை கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.அப்போது பேசிய நடிகர் விக்ரம், “நான் முதன் முதலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை இங்குதான் பார்க்கிறேன். நாங்கள் சினிமாவில் ஹீரோக்கள்; ஆனால், நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள். உண்மையிலேயே நான் வீர தீரசூரன் அல்ல; நீங்கள் தான் வீரதீரசூரர்கள்” என்றார். தொடர்ந்து, துஷாரா விஜயன் பேசும்போது, “ நம்மூர் திருவிழா அதை காண நேரில் வந்துள்ளேன்” என்றார். நடிகை துஷாரா விஜயனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Category

🗞
News
Transcript
00:00Oh
00:30Oh
01:00Oh
01:30Oh
01:34Thank you very much

Recommended