Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/12/2025
நீலகிரி: நீலகிரி மாவட்டம் வனப் பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப்பகுதிகளில் தற்போது தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படுவதால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன. இந்த நிலையில் குன்னூர், மஞ்சக் கொம்பை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடேரி கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் பகல் நேரத்தில் உலா வந்த கரடியை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். மேலும் கரடி நடமாடுவதை பொதுமக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் பகல் நேரத்தில் சர்வ சாதாரணமாக கரடி உலா வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கரடிகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. இதனால் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் குன்னூர், கோடேரி மலைப்பாதை தேயிலை தோட்டத்திற்குள் பகல் நேரங்களில் கரடி வருவதால் தேயிலைத் தோட்ட பணியாளர்கள் பணிக்கு செல்ல அச்சமடைந்து வருகின்றனர். இதனிடையே அந்த கரடி அங்குள்ள பாறையில் இரண்டு மணி நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்தது. அதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த வனத் துறையினர் கரடியின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் தனியாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர் 

Category

🗞
News
Transcript
00:00For more information visit www.fema.org

Recommended