Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/25/2025
விருதுநகர் : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்  அறை ஒன்று தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மாரனேரி தாலுகா அம்மபட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இன்று (மே 25) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பட்டாசு ஆலை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலையின் ஒரு அறையில், பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள இடர்பாடுகளை ஜேசிபி வாகனம் கொண்டு தீயணைப்புத் துறையினர் அகற்றினர். தொழிலாளர்கள் யாரும் இன்று பணியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Category

🗞
News
Transcript
00:30Transcription by CastingWords
01:00Transcription by CastingWords

Recommended