Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/16/2025
கேரளா: தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இதே பகுதியில் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகம் கேரள மாநிலத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு முக்கிய காப்பகமாகும். இங்குப் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டுப்பன்றி உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டதால் விலங்குகள் தங்களின் தாக்ரத்தை தீர்த்துக்கொள்ள தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு வனத்துறையினர் ஆங்காங்கே விலங்குகளுக்கு தண்ணீர் தேக்க தொட்டிகள் அமைத்து. விலங்குகளின் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.இந்நிலையில் பெரியாறு புலிகள் காப்பகம் பகுதியில் குட்டி யானை ஒன்று கோடைக்காலத்தின் வறட்சியால் வறண்டு போயுள்ள புல்வெளிக்கு மத்தியில் இருக்கும் சிறிய குழியில் இருந்து தனது தும்பிக்கையால் அந்த குழிக்குள் உள்ள நீரை எடுத்து உடம்பில் தெளித்து வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Category

🗞
News

Recommended