Skip to playerSkip to main contentSkip to footer
  • 2 days ago
டேராடூன்: உத்தரகாண்ட் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நபர், உயிருடன் ஒருவர் தப்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் உள்ள தராலி கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அக்கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பெருக்கெடுத்து ஓடிய கீர்கங்கா நதியால் அக்கிராமத்தில் உள்ள வீடுகள், கடைகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன. இந்த இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ராணுவ முகாமும் காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதால், பல ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஏற்தெனவே காட்டாற்று வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், வெள்ள இடிபாடுகளில் சிக்கிய ஒரு நபர், பல மணி நேரங்களுக்கு பிறகு உயிருடன் மீண்டு வருவதை நேரில் பார்த்த சிலர் மொபைல்ஃபோன்களில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் மற்றொரு நபர் இடிபாடுகளில் இருந்து பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடி வரும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதனிடையே தராலி கிராமத்தின் பெரும் பகுதி 20 முதல் 25 அடி வரை இடிபாடுகளில் புதைந்துள்ளதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்புக் குழு மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியாற்றி வருவதாக கர்வால் கமிஷனர் வினய் ஷங்கர் பண்டட் தெரிவித்துள்ளார்.  

Category

🗞
News

Recommended