தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு-வடுவூர் சாலையில் அமைந்துள்ளது குலமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி கிராமம். சுற்றிலும் பச்சைப் பட்டுடுத்திய நெல் வயல்கள், ஆங்காங்கே தென்னை மரங்கள் எனப் பசுமை பரவிக் கிடக்கும் செழிப்பான பகுதி. நெல், கடலை, உளுந்து என ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் பூமி. பெரும்பாலும் நெல் விவசாயமே நடைபெறும் பகுதியில், ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு அசத்தி வருகிறார் விஜயகுமார் என்ற விவசாயி.