மீன் பிடித்தொழில் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகி வரும் காலகட்டத்தில், கடலில் மிதவைக் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள். மீனவர்கள் குடியிருக்கும் கடற்கரைப் பகுதியிலேயே மிதவைக் கூண்டு மீன் வளர்ப்பு முறையைச் செயல்படுத்தி வருகிறார்கள். ‘படகில் சென்று மீன்பிடிப்பதில் உள்ள சிரமங்களிலிருந்து மீள்வது மட்டுமல்லாமல் அரசின் தொழில்நுட்ப உதவி, நிதி உதவிகளையும் பெற இந்த மீன் வளர்ப்பு முறை உதவுகிறது’ என்கிறார்கள் மீனவர்கள். இதுகுறித்து விளக்குகிறது இந்த காணொளி...