பி.டெக் முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்பாமல், சொந்த இடத்தில் கொட்டில் முறையில் பரண் அமைத்து, கலப்பின ஆடுகள் வளர்ப்பில் சாதித்து வருகிறார், இளைஞர் அரவிந்த் பாலகிருஷ்ணன். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் இருக்கும் கட்டநாச்சம்பட்டியில் இருக்கிறது இவரது ஆட்டுப்பண்ணை. தென்னை மரங்களுக்கு இடையில் கொட்டில்களை அமைத்து, ஆடுகளை வளர்த்து வருகிறார்.