அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள சந்தை நிறுவனங்கள் மூலமாக என்னென்னவோ பொருள்கள் விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சந்தை, மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் சூழலில்... ஆட்டுப்புழுக்கை, வேப்பங்குச்சி, முட்டை ஓட்டுத்தூள் போன்றவற்றையும்கூட இந்தச் சந்தையின் மூலமாக விற்க ஆரம்பித்து ஆச்சர்யப்படுத்துகிறார் அரியலூரைச் சேர்ந்த 21 வயது அருண்ராஜ்.