இயற்கை வாழ்வியல் தேடல், இயற்கை விவசாயம் சார்ந்த வருமான வாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்குக் கைகொடுப்பது தற்சார்பு விவசாயம்தான். அதனாலேயே, நகர்ப் பகுதியில் கைநிறைய சம்பாதிப்பவர்கள்கூட, விவசாய வேலைகளில் களமிறங்குகிறார்கள். அந்த வகையில், ஐ.டி பணியிலிருந்து விலகி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் கணேசன் அருணாசலம்.