புறக்கடைக் கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு நகரப் பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் நகரப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கோழி வளர்ப்பதில் பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில்தான் சென்னை அம்பத்தூரில் மொட்டை மாடியில் இதைச் செய்து காட்டி அசத்திக் கொண்டிருக்கிறார், வெங்கட்.