தஞ்சாவூர்-அம்மாப்பேட்டை சாலையில் உள்ள பூண்டிதோப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. எம்.காம், பட்டதாரியான இவர் தற்போது தமிழ்நாடு சூழலியல் சுற்றுலா தொடர்பாக முனைவர் பட்டத்திற்கான (பி.ஹெச்.டி) ஆய்வு செய்து வருகிறார். அதோடு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகிறார்.