`குச்சிக்கிழங்கு’, `கப்பக்கிழங்கு’ `மரச்சீனிக்கிழங்கு’ என்று பல பெயர்களில் மரவள்ளி அழைக்கப்படுகிறது. மரவள்ளியை இறவையிலும், மானாவாரியிலும் சாகுபடி செய்யலாம். பொதுவாக மலைப்பிரதேசங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. மலைப்பகுதிகளில் மழை கிடைக்கும் காலங்களான செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை. இறவையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடவு செய்யலாம். ஆண்டு முழுவதும் இந்தப் பயிரைப் பயிரிட முடிந்தாலும் அதிக மழை, வெயிலுள்ள காலங்களில் பயிரிட வேண்டாம்.