தேனி மாவட்டம், வாழை உற்பத்திக்கு முன்னோடியான மாவட்டம். பூவன், செவ்வாழை, ரஸ்தாளி எனப் பல வகைகள் இருந்தாலும், வெளிநாடுகளில் உள்ள கிராக்கி காரணமாக, தேனி மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும், ஜி.9 எனப்படும் திசு வளர்ப்பு வாழையைப் பயிர் செய்கிறார்கள். இந்த ரக வாழையைப் பொறுத்தவரை, கன்று நடவு செய்வதிலிருந்து தார் வெட்டும் வரை அதிகப்படியான ரசாயன உரம், பூச்சி மருந்து கொடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கருத்தாக உள்ளது. ஆனால், தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார், இதே ரக வாழையை, முழுக்க முழுக்க இயற்கை முறையில் வளர்த்து, அறுவடை செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார். வாழைத் தோட்டத்தில் இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.