விவசாயத்தில் பூச்சிகள் எந்த அளவிற்கு பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட இரண்டு மடங்கு சேதத்தை பறவைகளும், விலங்குகளும் ஏற்படுத்துகின்றன. இதில், மானவாரி விவசாயத்தைப் பொறுத்தவரையில் கம்பு, சோளக்கதிர்களை படைக்குருவிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல முறைகளைக் கையாண்டும் பாதிப்புகள் குறைந்த பாடில்லை. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகிலுள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர் அஜித்குமார், காற்றில் சுழலும் காற்றாடியின் இறக்கையின் மூலம் எழுப்பப்படும் ஓசையால் படைக்குருவிகளை விரட்டும் எளிய கருவியை வடிவமைத்துள்ளார்.