'ஜல்லிக்கட்டில் பாயும் புலி, கழனிக்காட்டில் கலக்கும் கில்லி' - புலிக்குளம் காளை!
புலிக்குளம் காளைகளின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த புலிக்குளம் கிராமம். இந்தரகக் காளைகளின் வீரத்துக்கு ஒரு வரலாறு சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள். “புலிக்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் குடிக்க வந்த புலியை தனது கூரிய கொம்புகளால் குத்தி கொன்றது இந்த இன காளை ஒன்று. புலிகளையே குத்திக்கொள்ளும் திறன் கொண்டிருந்ததால், இந்த இனத்துக்கே புலிக்குளம் என்கிற பெயர் நிலைத்துவிட்டது” என்பதுதான் அந்த வரலாறு.