நிலமிருக்கும் இடத்தில் நீர் இல்லை; நீரிருக்கும் இடத்தில் நிலமில்லை. விவசாயம் வெளுத்துப்போவதன் சாரம் இது தான். பட்டப் படிப்பை முடித்து விட்டு, வீராப்போடு விவசாயத்தில் இறங்கும் இளைஞர் பலரும், விரக்தியாகி வேலைக்குத் திரும்புவது, அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சியும், புதிய யுக்திகளுமே, இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அந்த வகையில், 'அக்வாபோனிக்ஸ்' என்ற நவீன ஒருங்கிணைந்த விவசாய முறை குறித்த ஆராய்ச்சிகள், கவனம் ஈர்க்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்த ஜெகன் வின்சென்ட் ஒன்றரை ஏக்கரில் அக்வாபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
Video - P.Kalimuthu Edit - Ajith Executive Producer - Durai.Nagarajan