‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்றார் கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ. அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி துரைசாமி. களைவெட்டும் வேலைக்கு ஆள் கிடைக்காத காரணத்தால், புதிதாகக் களைவெட்டும் கருவி ஒன்றை வடிவமைத்தார். அது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. தான் கண்டுபிடித்த கருவிமூலம் காய்கறி வயலில் செடிகளுக்கு இடையில் மண்டி கிடந்த களைச்செடிகளை வெட்டிக் கொண்டிருந்த துரைசாமியைச் சந்தித்துப் பேசினோம்.