தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜா, தனது இசைமூலம் தமிழ் சினிமாவை மாற்றியதுபோல், இவர் தனது சாகுபடி மூலம் இந்தப் பகுதி முழுக்க ஏலக்காயை மணமணக்க வைத்துள்ளார். இந்தப் பகுதிக்கு ஏலக்காய்ச் சாகுபடி புதிதல்ல. ஏற்கெனவே சாகுபடி செய்து இடையில் நிறுத்திய நிலையில், இந்தப் பகுதியில் காபி விவசாயம் செய்ய வந்திருக்கிறார் இளையராஜா. அப்போது காபியில் எதிர்பார்த்த லாபம் இல்லை. அதனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏலக்காய்ச் சாகுபடியில் இறங்கி இருக்கிறார். இவருக்குக் கிடைத்த மகசூல், இப்பகுதி விவசாயிகளை மீண்டும் ஏலக்காய்ச் சாகுபடி செய்ய வைத்துள்ளது.