கரூரைச் சேர்ந்த சரவணபிரபு இன்ஜினீயரிங் படிப்பு மூலமாகக் கிடைத்த ரூ.85,000 சம்பளம் தந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது கிராமத்தில் நாட்டுமாடு, குதிரை, ஆடு, கோழி வளர்க்கும் ஒருங்கிணைந்த பண்ணையத் தொழிலில் இறங்கி, வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். அதன்மூலம், மாதம் 1,20,000 ரூபாய் வரை சம்பாதித்து, மற்ற இளைஞர்களுக்கு உந்துசக்தியாக மாறியிருக்கிறார்.