தருமபுரி அருகே மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் சேமிப்புஇ வங்கியில் பெற்ற கடன் தொகை வசூல் செய்த குழுவின் தலைவி வங்கியில் செலுத்தாமல் 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் குழுவின் தலைவி மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பது: தருமபுரி மாவட்டம்இ பாப்பாரப்பட்டி அருகே கண்ணுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கோவிந்தம்மாள் என்பவர் தலைமையில் நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்களை இயக்கி வந்துள்ளார். இந்தக் குழுவில் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக கோவிந்தம்மாள் உள்ளார். இவர் உறுப்பினர்களின் சேமிப்புஇ வங்கியில் பெற்ற கடன் தொகைஇ சங்க கடன் தொகை ஆகியவற்றை எங்களிடம் வசூல் செய்து முறையாக வங்கியில் செலுத்தாமல் எங்களை ஏமாற்றி ரூபாய் 9 லட்சம் மோசடி செய்துள்ளார். இதனால் எங்கள் வங்கி கணக்கையும் முடங்கிவிட்டார். இதனை கேட்க சென்றஇ எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுகிறார். எனவே எங்கள் பணத்தை மீட்டுஇ வங்கி கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.