ஸ்ரீதேவியின் வாழ்க்கை ரகசியங்கள் - கசிய வைத்த உறவினர்- வீடியோ

  • 6 years ago
நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரால் வேதனையில் வாழ்ந்து வேதனையுடனே இறந்துவிட்டதாக அவரின் உறவினர் வேணுகோபால் ரெட்டி தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ம் தேதி உயிர் இழந்தார். மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் அங்கிள் வேணுகோபால் ரெட்டி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரிக்கு போனி கபூரை பிடிக்காது. அவரை திருமணம் செய்ய வேண்டாம் என்று தனது மகளிடம் தெரிவித்தார். போனி தங்கள் வீட்டிற்கு வந்தபோது அவரை அசிங்கப்படுத்தினார் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரியின் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய விரும்பினார். இது குறித்து நாங்கள் அனைவரும் ஆலோசித்தோம். ஆனால் இறுதியில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சில படங்களை தயாரித்து போனி கபூருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். நஷ்டத்தை ஈடுகட்ட ஸ்ரீதேவி தனது சொத்துக்களை விற்றார். ஸ்ரீதேவி தன் இதயத்தில் வலியுடனேயே வாழ்ந்தார், வலியுடனேயே இறந்தார். கடனை அடைக்க ஸ்ரீதேவி தனது சொத்துக்களை விற்றார். கையில் பணம் இல்லாததால் தான் அவர் மீண்டும் படங்களில் நடிக்க வந்தார். மூத்த தாரத்தின் மகன் அர்ஜுனுக்கும், தனக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று எங்களிடம் கூறினார். மருத்துவமனை கொடுத்த பணத்தை பிரிப்பதில் ஸ்ரீதேவிக்கும், அவரது தங்கை ஸ்ரீலதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. குடும்பத்தார் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தனர். அந்த பணம் போக ஸ்ரீதேவி தனது தங்கைக்கு நிறைய பணம் கொடுத்துள்ளார் என்றார் வேணுகோபால் ரெட்டி.

Recommended