Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/14/2017
ராஜஸ்தானுக்கு தமிழக போலீசாரை வரவழைத்து கொல்வதற்கு போலீஸ் இனபார்மரை மிரட்டி கொள்ளையன் நாதுராம் நடத்திய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

கொள்ளையன் நாதுராம் 3 பேருடன் மட்டுமே சுற்றி திரிகிறான் என்ற தகவலை பரப்பி தமிழக போலீசார் சிலரை மட்டுமே ராஜஸ்தானுக்கு வரவழைத்துள்ளான். இன்பார்மர் கூறியதை நமபி தமிழக போலீசார் 6 பேர் மட்டுமே ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

அதிக போலீசாரை அனுப்பியிருந்தால் தனது கணவர் இறந்திருக்க மாட்டார் என்று பெரியபாண்டியின் மனைவி கதறிய கதறல் இன்னமும் கண் முன்னே நிற்கிறது. ஆனால் சிலரை மட்டுமே ராஜஸ்தானுக்கு வரவழைக்க சாதுர்யமாக நாடகமாடியுள்ளான் கொள்ளையன் நாதுராம்.லட்சுமிபுரம் ரெட்டேரி கடப்பா சாலையில் உள்ள மகாலட்சுமி ஜூவல்லரி மற்றும் அடகு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் ராமாவாஸ் கிராமத்திற்கு சென்று சென்னாராம்,60, சங்கர்லால்,40, ஜனராம்,55, கீதாராம்,49 ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நாதுராமின் தந்தையும், அவருடைய உறவினர்களும் கைது செய்யப்பட்டனர். தன்னுடைய தந்தை மற்றும் உறவினர்களை விடுவிக்கக் கோரி நகைக்கடை உரிமையாளரை மிரட்டினான் கொள்ளையன் நாதுராம். அப்போதே போலீசார் மற்றும் நகைக்கடை உரிமையாளரை கொன்று விடுவேன் என நாதுராம் கூறியிருந்தான்.

Category

🗞
News

Recommended