• 7 years ago
200 ஆண்டுகளுக்கு முந்தைய பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியதில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றம் நிலவுகிறது. வீர சிவாஜிக்கு பின்னர் மகாராஷ்டிராவை பேஷ்வா பிராமணர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சியில் ஜாதிய ஒடுக்குமுறை மிக மோசமாக கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தலித்துகளாகிய மகர் சமூகத்தின் படையானது, ஆங்கிலேயர்களுடன் இணைந்து பீமா கோரேகான் என்ற இடத்தில் பேஷ்வா பிராமணர் படையுடன் கி.பி.1818-ம் ஆண்டு மிகப் பெரிய யுத்தத்தை நடத்தினர். இந்த யுத்தத்தில் 25,000 பேஷ்வா பிராமணர் படை கொல்லப்பட்டனர். 500 மகர் படையினர் வீரமரணமடைந்தனர்.
இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றி தூண் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதியன்று இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்று திரண்டு வீரவணக்கம் செலுத்துவர்.

ஆனால் இந்த ஆண்டு, பீமா கோரேகான் வெற்றியை கொண்டாடுவது தேசதுரோகம் என கூறி இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தலித்துகள் பீமா கோரேகானில் ஒன்று திரண்டனர்.

இதற்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இந்த வன்முறையில் புனேவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிரா முழுவதும் தலித்துகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Category

🗞
News

Recommended