Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/8/2017
மடாதிபதி ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலானதால், மடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி நகரில் அமைந்துள்ளது, கல்மதா மடத்தின் மடாதிபதி கொட்டுரேஷ்வரா (56) மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த இந்த மடம் 400 ஆண்டுகள் பழமையானது.

1995ம் ஆண்டு கொட்டுரேஷ்வரா, மடாதிபதியாக பொறுப்புக்கு வந்தார். இந்த நிலையில், 2010ம் ஆண்டு முதல் மடத்தில் சமையல் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணுடன் இவர் உல்லாசமாக இருப்பது போல ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை சூட் செய்தது, மடாதிபதியின் முன்னாள் டிரைவர் மல்லையா ஹேரூர், என்று ஒரு தகவல் பரவியுள்ளது. ஆனால் டிரைவரோ இதை மறுத்துள்ளார். மேலும், வீடியோ தன்னால் எடுக்கப்பட்டது என்று நினைத்து தனக்கு மடாதிபதி சார்பில் மிரட்டல்கள் வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதேநேரம், 20 வருடங்களாக தான்தான், சாமியார் விரும்பும் பெண்களை சப்ளை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சாமியாரால் பாலியல் பாதிப்புக்கு உள்ளானதாக இதுவரை எந்த பெண்ணும் புகார் அளிக்க காவல் நிலையத்தை அணுகவில்லை.

இதனிடையே வீடியோ வைரலானதை பாார்த்த பொதுமக்கள் மடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குகவிக்கப்பட்டுள்ளனர்.

Category

🗞
News

Recommended