Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
சிந்தை செய்வாய் மனமே! தினமே சிந்தை செய்வாய் மனமே!
சிவகுமரனை திரு முருகனை, குகனை!
முந்தை வினைத்தீர அருள் சேர முருகனை நினை மனமாற! முருகனை நினை மனமான!
பந்த பாசம் அவன் பாதமே! அதனை எந்நாளும் மறவாதே! சொந்தம் மாகும் அவன் துணையினால் வரும் இன்பம் காணத் தவறாதே! வந்துபோகும் இந்த வாழ்விலோர் பயணம் கண்டதேது அலையாதே!
செந்தில்நாதன் அருள் ஒன்று தான் உறவு நெஞ்சிலே கலையாதே!
நினைந்து நினைந்து! நெகிழ்ந்து நெகிழ்ந்து! நித்தம் நித்தம் வாழ்ந்து! உணர்ந்து உணர்ந்து உள்ளம் புறமும் உவகை கொண்டு ஆடிடு! உண்மை சொல்வான் அவனே! நன்மை செய்வான் குகனே!