நீலமயிலேறி விளையாடும் முருகனை! கண்குளிர மலை மீதிலே காணலாம்!
அலை போல திரளாக அடியார்கள் சென்று தொழும் அருள் ஞானப் பழமாக விளங்கும்! ஐய்யனை! பழனி மலை மீதிலே காணலாம்! பழனி மலை மீதிலே காணலாம்!
அயன் சொல்லத் தயங்கும் நின்ற பிரணவத்தின் பொருள் தன்னை! ஆலமுண்டவன் செவியில் ஓதியவனை… சுவாமி மலை மீதிலே காணலாம்!
பயன் கூட்டும் வரம் பலவும் பக்தர்க்கு அருளவென்றே! பரிவோடு நிற்கின்ற பாங்கு அதனை தனிகை மலை மீதிலே காணலாம்!
அருணகிரி இசைத்த திருப்புகழ் தனைக் கேட்டு...
அகம் மகிழ்ந்து அருள் செய்த ஆறுமுகனை விராலி மலை மீதிலே காணலாம்!
கருணைக் கடலே என்று கரம் கூப்பி வணங்கி நின்று பரவிடும் அன்பர்க்கெல்லாம் அருள்பவனை!
சோலை மலை மீதிலே காணலாம்!
மான்மகளாய்ப் பிறந்த வள்ளிமணாளனை மால்மருகனை வடிவேல் முருகனை ஆ...! வள்ளி மலை மீதிலே காணலாம்!
தேன் சுவை நிகர் மொழியாள் குஞ்சரிசயை மணந்த ஆ...! தேன் சுவை நிகர் மொழியாள் குஞ்சரிசயை மணந்த தேவசேனாபதியை திருப்பரங்குன்றம் என்னும்! மலை மீதிலே காணலாம்! திருப்பரங்குன்றம் தனில் காணலாம்!
செந்தில் மாமலையுரும் செங்கல்வராயனை, குன்று தோர் ஆடி வரும் குமரனை! சண்முகனை மலை மீதிலே காணலாம்!