கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். கிராமத்து கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் தற்போது இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் மாடர்ன் மங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசாக இருக்கிறது. காளி படத்தில் கிராமத்து தோற்றத்தில் நடித்ததால், அடுத்தடுத்து அது போன்ற கேரக்டர்களுடனேயே என்னை அணுகினார்கள். ஆனால் நான் தான் ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க விரும்பவில்லை. அந்த சமயத்தில் தான் ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் பட கேரக்டருக்காக என்னை அணுகினார்.