தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பிரியா பவானிசங்கர், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார். பின்னர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கடைக்குட்டி சிங்கம் படத்திலும், பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளங்கள் மற்றும் வெளியூர் செல்லும் போது எடுக்கும் புகைப்படங்களை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பிரியா வெளியிடுவார். அந்த வகையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம், ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் அமைந்துள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில், இரண்டு சிம்பான்சி குரங்குகள் பிரியாவின் கன்னத்தில் முத்தமிடுகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள், ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.