நடப்பு சாம்பியனுக்கு முதல் வெற்றி | Australia vs Afghanistan | World Cup Cricket
  • 5 years ago
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா,
ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 38.2 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.
ஆடம் ஜம்பா, கம்மின்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 208 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
ஆஸ்திரேலிய அணி ஆடத் துவங்கியது. துவக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். 34.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில்
ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. 89 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்த வார்னர் மேன் ஆப்தி மேட்ச் விருது பெற்றார்.
Recommended