இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடரின் 25–வது ஆட்டத்தில் நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா மோதின.
ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா, 49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. அதிகபட்சமாக துஸ்சென் 67 ரன், ஆம்லா 55 ரன் எடுத்தனர்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி, 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் வில்லியம்ஸன் 106 ரன் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். மேன் ஆப்தி மேட்ச் விருதையும் அவர் பெற்றார்.