உண்மையிலேயே கால்சியம் உணவுகள் எலும்புகளை வலுபெறச்செய்யுமா ?- வீடியோ

  • 6 years ago
கால்சியம் சத்து நம் உடலுக்கு மிக மிக அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தில் அது மிக்கிய பங்காற்றுகிறது, அதோடு நம் பல் மற்றும் எலும்புகளின் வலுவாக இருக்கவும் கால்சியம் அத்தியாவசியமாக இருக்கிறது. அதோடு நம் உடலில் இருக்கும் தசைகளும் நரம்புகளும் சீராக இயங்குவதற்கு கால்சியம் அவசியமாகும். நம் ரத்தத்தில் இருக்கும் ஆல்கலைன் அளவை பராமரிக்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரக்கவும் என்சைம் உற்பத்திக்கும் கால்சியம் தேவைப்படுகிறது. இப்படி ஏராளமான நன்மைகளை செய்கிற கால்சியம் நம் உடலில் சேர்த்துக் கொள்வது அதனை உடலில் குறிப்பிட்ட அளவு தக்க வைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பிற வகை மினரல்களை விட உங்கள் உடலில் கால்சியத்தின் அளவு சற்று கூடுதலாக இருக்க வேண்டும். உடலில் இருக்கக்கூடிய கால்சியத்தின் 99 சதவீதம் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளில் தான் சேமிக்கப்பட்டிருக்கும். மீதமிருக்கும் ஒரு சதவீதம் ரத்தம், தசை,தசை நார்கள், திசுக்கள் ஆகிய இடங்களில் கலந்திருக்கும்

Things to do for calcium deficiency

Recommended