நேற்று அடித்த சரக்கு நாற்றம் போக வைக்க வழிகள்!- வீடியோ

  • 6 years ago
வாரம் முழுவதும் உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்காமல் ரோபோ போன்று வேலை செய்து பலரும் மிகுந்த மன அழுத்தத்துடனும், உடல் களைப்புடனும் இருப்பார்கள். இந்நிலையில் வார இறுதி வந்தாலே பலரும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பார்கள். குறிப்பாக பேச்சுலர்கள் மிகவும் குதூகலமாக இருப்பர். இதற்கு வார இறுதியில் நடக்கும் பார்ட்டியை காரணமாக கூறலாம். தற்போது எதற்கு எடுத்தாலும் பார்ட்டி கேட்கும் பழக்கம் மக்களிடையே வந்துவிட்டது. குறிப்பாக ஆண்களின் பார்ட்டி என்றால் அதில் சரக்கு இல்லாமல் இருக்காது. சரக்கு அடிக்கவே பார்ட்டியை கேட்போர் அதிகம். அதிலும் பேச்சுலர்களாக இருந்தால், வார இறுதியில் வரும் எந்த ஒரு பார்ட்டியையும் விட்டுவைக்க மாட்டார்கள். இப்படி வார இறுதியில் பார்ட்டியில் கலந்து கொண்டு, மறுநாள் அலுவலகத்திற்கு செல்வது என்பது மிகவும் கொடுமையாக இருக்கும். அதோடு அதிகமாக சரக்கு அடித்துவிட்டால், அந்த சரக்கின் நாற்றம் மறுநாள் அலுவலகத்திற்கு சென்றாலும் வீசும். இதற்கு காரணம் ஆல்கஹாலில் உள்ள குறிப்பிட்ட மூலக்கூறுகள் தான். இவையே வாயில் கெட்ட நாற்றத்தை வீசச் செய்யும். மேலும் ஆல்கஹால் எளிதில் செரிமானமாகாது. இப்படி மெதுவாக செரிமானமாவதால், அது இரத்த நாளங்கள் மற்றும் உடல் திசுக்களில் தேங்கவும் ஆரம்பித்து, தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களாக தேங்கி, உடல் ஆரோக்கியத்தை பாழாக்கும். ஒருவர் ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக மதுவைக் குடித்தால், அந்த நாற்றம் அவ்வளவு எளிதில் உடலில் இருந்து போகாது. சரக்கு அடித்த மறுநாள் வரை அந்த நாற்றம் வீசும். இக்கட்டுரையில் ஒருவர் மீது வீசும் சரக்கு நாற்றத்தைப் போக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


To make sure that people do not know that you’ve been drinking a bit too much, you can use simple and easy tricks to get rid of the lingering smell.