ஜெ.கைரேகை சர்ச்சை...ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி விளக்கம்- வீடியோ

  • 7 years ago

ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார். ஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமளிக்க விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரண கமிஷன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது விசாரணையைத்தொடங்கியுள்ளது. திமுக டாக்டர் சரவணனிடம் இருந்து விசாரணைப் புள்ளியானது தொடங்கியது.

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். போஸின் வேட்பு மனுவில் இடம்பெற்றிருந்தது ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் சந்தேகம் எழுப்பி இருந்தார்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்திடமும் இது தொடர்பான ஆவணங்களை சரவணனன் அளித்திருந்தார். அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார்.

Dr. Balaji today appear for hearing Justice Arumugasamy comission who is investigating Jayalalitha death probe Dr. Balaji appear regarding Jayalalitha finger print impression.

Recommended