அப்பல்லோவில் அனுமதித்ததும் ஜெ. இட்லி சாப்பிட்டாரா? டாக்டர். பாலாஜி புது தகவல்!- வீடியோ

  • 6 years ago
அப்பலோ மருத்துவமனையில் கடைசி வரை ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்ததாகவும், ஜெயலலிதா தொடக்கத்தில் இட்லி சாப்பிடவில்லை நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்றும் மருத்துவர் பாலாஜி நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்ததில் எழுந்த சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க டாக்டர் பாலாஜிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று டாக்டர் பாலாஜி நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜரானார்.

அப்போது ஆறுமுகசாமி கமிஷனிடம் அவர் பல தகவல்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொடக்க நாள் முதல் கடைசி வரை சசிகலா உடன் இருந்ததாக கூறியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு தான் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், லண்டன் மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் மட்டுமே சிகிச்சை அளித்தனர். ஐதராபாத், பெங்களூரில் இருந்தும் சில மருத்துவர்கள் வந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்காக லண்டன் செல்வதை ஜெயலலிதா மறுத்ததாகவும் டாக்டர் பாலாஜி கூறி இருக்கிறார். மேலும் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட 5 மருத்துவர்கள் குழுவில் தான் மட்டுமே ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அவரது கைரேகை பதிவு செய்யப்பட்ட போது நான் அவருக்கு அருகில் தான் இருந்தேன், அவர் அப்போது சுயநினைவோடு தான் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா இல்லையா என்ற சர்ச்சைக்கும் டாக்டர் பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜெயலலிதா தொடக்கத்தில் இட்லி சாப்பிடவில்லை, நீராகாரம் மட்டும் எடுத்துக் கொண்டார் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.



Dr. Balaji presented in front of Justice Arumugasamy comission and said what else treatment given to Jayalalitha and also sources saying that he says Jayalalitha not had Idly while at hospital.

Recommended