ஆறுமுகசாமி ஆணையம் முன் வெங்கட்ரமணன் ஆஜர்- வீடியோ

  • 6 years ago
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரின் தனிச் செயலராக இருந்த வெங்கட்ரமணன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளார்.அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை வெங்கட்ரமணன் சந்தித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், அரசின் செயல்பாடுகள் குறித்து வெங்கட்ரமணன் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினாரா? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஜெயலலிதாவை வேறு யாரெல்லாம் அரசு சார்பில் சந்தித்தார்கள்? என்பது போன்ற கேள்விகள் இவரிடம் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்த போது அரசு நிர்வாகத்தை செயல்படுத்தியது யார்? யார்? அவரை நேரில் சந்தித்தவர்கள் யார்? அமைச்சர்கள் யாரேனும் சந்தித்தனரா? அதிகாரிகள் யாரேனும் சந்தித்தனரா? என்பது குறித்தும் இவரிடம் இருந்து விளக்கம் பெறும் என்று கூறப்படுகிறது.

The inquiry commission on the death of late Chief Minister J Jayalalithaa has summoned four IAS officers – K Venkataraman, S Vijayakumar, A Ramalingam and Jayashree Muralidharan – who were functioning as secretaries to the late leader.

Recommended