திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரிதன்யா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.