ஆண் : தீம்தகத்தோம் தீம்தகத்தோம் ஐயப்பா தெய்வத்திலே நீ ஒருவன் மெய்யப்பா தேடினோம் கூடினோம் கருணை செய்யப்பா தினம் உனை நாடினோம் சுவாமி ஐயப்பா
ஆண் : தீம்தகத்தோம் தீம்தகத்தோம் ஐயப்பா தெய்வத்திலே நீ ஒருவன் மெய்யப்பா
ஆண் : சாமியே….ய்….
குழு : சரணம் ஐயப்போ
ஆண் : மார்கழியில் நாங்களெல்லாம் பேட்டைத் துள்ளுவோம் மலை மீது ஏறி வந்து உன்னைப் பாடுவோம் வரிசையுடன் பம்பை நதி நீரில் ஆடுவோம் வாவரெனும் துணைவனையும் வணங்கக் கூடுவோம் மனதில் எமக்கு இடங்கொடுத்து உதவி செய்யப்பா மகர விளக்குக் காண வேண்டும் சுவாமி ஐயப்பா
ஆண் : சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம் குழு : சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம்