‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமான இணை பெற்றோரானார்கள்

  • last year
#Kamadenutamil சின்னத்திரை நடிகர் செந்தில்- நடிகை ஸ்ரீஜாவுக்கு ஆண் குழந்தை! விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இணை. இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் முதல் சீசன் கடந்த 2011-ல் ஆரம்பித்து 2013 வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்த போதே காதலித்த இருவரும் 2014-ல் ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி எட்டு வருடங்கள் கடந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் செந்தில், ஸ்ரீஜா இருவரும் தாங்கள் பெற்றோர் ஆன செய்தியை வளைகாப்பு புகைப்படங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

Recommended