'சரவணன் மீனாட்சி' 3வது சீசனில் நடிக்க ஒப்புக் கொண்டது தவறான முடிவு - ரச்சிதா

  • 4 years ago
''சரவணன் மீனாட்சி' 3வது சீசனில் நடிக்க ஒப்புக் கொண்டது, நான் எடுத்த தவறான முடிவு. அந்த சீசனின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிரச்னைகளை எதிர்கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட் ஆரோக்கியமானதாக இல்லை. நிறைய அவமானங்கள். எனக்கு நிகழ்ந்த அந்த அவமானங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் கேட்காமல் நழுவினார்கள். மொத்தத்தில் இந்தக் கடைசி சீசன் என்னை ரொம்பவே காயப்படுத்திட்டுப் போயிடுச்சு''
-'சரவணன் மீனாட்சி' சீரியல் நிறைவடைந்து ஒன்றரை மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அதன் ஹீரோயின் ரச்சிதாவிடமிருந்து இப்படியொரு குமுறல் வந்திருக்கிறது.
என்ன நடந்தது? ரச்சிதா வார்த்தைகளிலேயே கேட்கலாம்.
''செந்தில்-ஶ்ரீஜா நடிச்ச முதல் சீசன் நிறைவடைய'சரவணன் மீனாட்சி' 2வது சீசனுக்குதான் நான் கமிட் ஆகுறேன். எனக்கும் தினேஷுக்கும் மேரேஜ் ஆகியிருந்த புதுசு அது. ஶ்ரீஜாவை மறந்து என்னை மீனாட்சியா மக்கள் ஏத்துக்கத் தொடங்கி நல்லபடியா போயிட்டிருந்த சூழல்லதான் முதல் முறையா சீரியலோட ஹீரோ இர்ஃபான் சேஞ்ச் ஆகிறார். சினிமா பண்ணப் போறதா சொன்னாங்க. சீரியல்ல இந்த மாற்றம் சகஜம்னு நினைச்சாலும், ஜோடிப் பொருத்தம் கரெக்டா செட் ஆகியிருந்த நேரத்துல நடந்த மாற்றம்கிறதால லேசா அப்செட் ஆச்சு.

ரெண்டாவது ஹீரோ பிரேம். கேரக்டருக்குப் பொருந்தலைன்னு மூணு மாசத்துல கிளம்பிட்டார். இப்ப கதையில சேஞ்ச் நடந்திச்சு. அதாவது நேத்து வரை ஒருத்தரை லவ் பண்ணிட்டு நாளையிலிருந்து வேறொருவரை லவ் பண்ணனும். யார்கிட்டப் போய்க் கேட்கிறது? ஏத்துக்கிட்டு அப்படியே நடிச்சேன். ஒருவழியா மூணாவது ஹீரோ மாறுவதற்குள் அந்த சீசனை முடிச்சிட்டாங்க.

இதுக்கு மேலதான் பிரச்னை ஆரம்பிக்குது. 'மீனாட்சி' ரோல் தொடர்ந்து நீங்க பண்ணனும்'னு வற்புறுத்திக் கேட்டாங்க. 'நம்ம மேல நம்பிக்கை வச்சுக் கேட்கிறாங்களே; பண்ணினா என்ன'ன்னு நினைச்சு சரி சொன்னேன். என்னோட இந்த முடிவு தவறானதுன்னு பின்னாடிதான் தெரிஞ்சது.

'ஏதோ இவங்களாலதான் சீரியல் ஓடுதாமே'ங்கிற மாதிரியா பேச்சுல கிளம்பி, அதுல மூணு ஹீரோ; இதுல எத்தனை ஹீரோ'ங்கிற மாதிரியான அர்த்தம் விளக்க முடியாத குத்தல் பேச்சு வ்ரை நீண்டது. ஒரு ஹீரோயின்..நாலஞ்சு ஹீரோன்னு வேறெந்த நடிகையும் எனக்க?

Recommended