சரவணன் மீனாட்சி...ஒரே ரொமான்ஸ் மீனாட்சியா இருக்கே!- வீடியோ

  • 7 years ago
சரவணன் மீனாட்சி சீசன் 3யில் பேய் எபிசோடுகள் முடிந்து விட்டன. இப்போது மீண்டும் ரொமான்ஸ், போட்டி பொறாமை ஆரம்பித்து விட்டது.
சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.
சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர்.
சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். சரவணன் மீனாட்சி சீசன் 3 கடந்த ஜூலை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கிராமத்தில் உள்ள சரவணன் வெளிநாட்டில் படித்து விட்டு வந்து மதுரையில் வசித்து வரும் மீனாட்சியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மாமன் மகன் சரவணனை காதலித்த முத்தழகு கோபம் கொண்டு சரவணனின் அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரே வீட்டிற்குள் இருவரும் வசிக்க போட்டி, பொறாமை சண்டைகள் ஆரம்பிக்கின்றன.

Vijay TV telecast Serial Saravanan Meenakshi ghost episode finished, romance episode begins.

Recommended