நாய் அடி, பேய் அடி.. கதறும் மாணவர்கள்..! ஒடிசாவில் கொடூரம்..!

  • 5 years ago
மதிப்பெண் குறைவாக எடுத்ததாகக் கூறி கல்லூரி மாணவர்களை விடுதி காப்பாளர் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒடிசாவில் உள்ள காந்தி அறிவியல் கல்லூரியின் விடுதி காப்பாளர் பிஷ்வரஞ்சன் ரானா. அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பிஷ்வரஞ்சன் பரிந்துரையின் பேரில் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த மாணவர்கள் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காப்பாளர் பிஷ்வரஞ்சன் அந்த மாணவர்களை பெரிய பிரம்பால் கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய கல்லூரி முதல்வர் சுதன்சு சேகர், குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தினால் மாணவர்கள் மீது காப்பாளர் இவ்வளவு கோபத்தைக் காட்டியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. இது மிகவும் மோசமான நிகழ்வு.

மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எந்த வித புகாரையும் இதுவரை நான் பெறவில்லை. ஆனாலும் காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காப்பாளர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்

Recommended