நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் ஆலயங்களில் 108 பால்குட அபிஷேகம் பெருவிழா- வீடியோ

  • 5 years ago
புதுச்சேரி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு பக்தர்கள் 108 பால்குடம் சுமந்து வந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த பால்குட ஊர்வலமானது நாக முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலூர் சாலை வழியாக சென்று அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு 108 கூடங்கள் மூலம் பால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் தீபாராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் கோயில் அறங்காவலர் வாரியத்தை சேர்ந்த அழகப்பன் கார்த்திகேயன் ஏழுமலை சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

DES : 108 Balakudu Abhishekam Festival of Nagamuthu Mariamman and Muthu Mariamman temples in Puducherry

Recommended