நெல்லையப்பர் கோவிலுக்கு ஏப்.27-ல் கும்பாபிஷேகம்

  • 6 years ago
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்த ஜோதிடர்களும் சாஸ்திர விற்பன்னர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் நெல்லையப்பர் கோவில் தாமிரசபையாகும். இந்த கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தற்போது இரண்டு ஆண்டுகள் தாமதமாக, வரும் 27ஆம் தேதி அதிகாலை 4.40 மணி முதல் 5.10 மணிக்குள் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா குறித்து தேதி அறிவிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட நிலையில் கும்பாபிஷேக தேதியை மாற்ற வேண்டும் என ஜோதிடர்கள் வலியுறுத்துகின்றனர்.


The much awaited kumbabishekam at the historic Sri Nellaiyappar Temple, in Tirunelveli, on April 27.Devotees oppose to the date of Kumbabishekam.

Recommended