தானா சேர்ந்த கூட்டம் பாணியில் கொள்ளை.... திருப்பூரில் பரபரப்பு....

  • 6 years ago
பின்னலாடை நிறுவனர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் நெருப்பெரிசல் காலணியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கார் கண்சல்டிங் மற்றும் பின்னலாடை நிறுவனங்களை நடத்தி வருகிறார். நேற்று சிவக்குமாரின் மனைவி சாந்தாமணி தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று மதியம் சிவக்குமாரின் வீட்டிற்கு ஸ்கார்பியோ காரில் வந்த நபர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டதுடன் வீட்டை சோதனையிடுவதாக கூறியுள்ளனர். மேலும் சாந்தாமணியிடம் இருந்த செல்போன்களை பிடுங்கியதுடன் வீட்டில் இருந்த பீரோல் மற்றும் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த பல லட்சம் மதிப்புடைய நகைகள் மற்றும் பல லட்சம் பணத்தை எடுத்து கொண்டதுடன் முறையான கணக்குகளை காண்பித்து விட்டு அலுவலகத்திற்கு வந்து அவற்றை பெற்று கொள்ளவும் என்று கூறி தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சாந்தாமணி கணவர் சிவக்குமாரிடம் தெரிவிக்க அதிர்சியடைந்த அவர் இது குறித்து வருமான வரித்துறை அலுகத்தில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது சோதனைகள் ஏதும் நடத்தப்பட வில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்க அதிர்ச்சியடைந்த சிவக்குமார் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் கொள்ளையடித்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சூர்யா நடித்து வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

des : The police are looking for people who have been robbing jewelry money by playing the role of income tax officials at home.

Recommended