தானா சேர்ந்த கூட்டம் பாணியில் கொள்ளை | Oneindia Tamil
  • 6 years ago
வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் வருமானவரித்துறை அதிகாரி என்று கூறி கையில் இருந்த பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் சூரியா நடித்து வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி கொள்ளையடிப்பது போன்ற காட்சிகள் அத்திரைப்படத்தின் கதையாக இருந்தது. அத்திரைப்படத்தில் வரும் காட்சிகளை போன்று வேலூர் மாவட்டம் சேனூர் பல்லன் நகரை சேர்ந்த பீடித்தொழிலாளி சேட்டு தனது மனைவியுடன் வீட்டை அடமானம் வைத்து 1 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது ரயில்வே கேட் பகுதியில் சேட்டை வழிமறித்த ஒருவர் தன்னை வருமானத்துறை அதிகாரி என்று கூறி கையில் இருந்த பணத்தை வாங்கி கொண்டு ரயில்வே கேட்டின் மறுபுறம் காரில் அமர்ந்துள்ள உயரதிகாரியிடம் வந்து கணக்கு காண்பித்து விட்டு பணத்தை பெற்று கொள்ளுமாறு கூறி பணத்தை எடுத்து சென்றுள்ளார். ரயில் வருவதையொட்டி ரயில்வே கேட் மூடப்பட்டிரு ந்துள்ளது. ரயில் கடந்து சென்றதும் சேட்டும் அவரது மனைவியும் மறுபுறம் பார்க்கும் போது கார் ஏதும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி பணத்தை பிடுங்கி ஏமாற்றியவர் மீது சேட்டு காவல்துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி வருமான அதிகாரி போன்று நடித்து ஏமாற்றிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The incident took place when the money was taken by the owner of the income taxpayer who bought money from the house mortgage.

Recommended