19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ

  • 6 years ago
காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதியாக 19 வயதில் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயேந்திரர் 89 வயதில் காலமானார்.

காஞ்சிபுரம் : இந்து சமய சேவைகளில் முக்கிய பங்காற்றிய காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலமானார். 19 வயதில் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டவர், சங்கரராமன் கொலையில் கைது என புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் ஜெயேந்திரர்.

1935ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிறந்தவர் ஜெயேந்திர சரஸ்வத. சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புரோஹிதத் தன்மையாலும், ஆழ்ந்த புலமையால் இந்து சமய மதத்தினரிடையே செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்தார். தமிழகத்தில் இந்து சமயத்தை பரப்பும் விதமாக பல முக்கிய நடவடிக்கைகளை செய்தவர் ஜெயேந்திரர்.

1954ம் ஆண்டு தன்னுடைய 19ம்வது வயதில் காஞ்சிபுரம் சங்கரமடத்து இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார். 40 ஆண்டுகள் இளையமடாதிபதியாக இருந்த அவர் 1994ம் ஆண்டில் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். ஜெயேந்திரருக்கு தற்போது 82 வயதாகிறது. பெரியவா என்று ஜெயேந்திரரை வழிபடுபவர்கள் அழைக்கின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்து சமயம் மட்டுமின்றி பொதுவாழ்விலும் நாட்டம் கொண்டவராக இருந்த ஜெயேந்திரர் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை மார்ச் 2011ல் தொடங்கினார்.

Recommended