ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரது மரணத்தில் துபாய் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் கிளியரன்ஸ் சான்று வழங்க மறுத்தது. மாற்றாந்தாயான ஸ்ரீதேவியை பிடிக்காவிட்டாலும் தந்தை போனி கபூருக்கு ஆதரவாக இருக்க துபாய் சென்றுள்ளார் அர்ஜுன் கபூர். ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்ட பிறகு தனி விமானம் மூலம் இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது. மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் கூடியுள்ளனர். ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நாளை மும்பையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Category
🗞
News