பருத்திவீரன் ரிலீஸ் ஆன நாள் இன்று- வீடியோ

  • 6 years ago
கார்த்தி சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியால் செம மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி இன்று நல்ல படங்களில் நடித்து இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் முதல் படமே பிரமாண்ட வெற்றியை அடைந்தது தான் காரணம். கார்த்தியின் சினிமா வாழ்க்கையைத் துவக்கி வைத்த 'பருத்தீவிரன்' திரைப்படம் ரிலீஸான தினம் இன்று தான். இந்த நாளை அவரது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாது. அமெரிக்காவில் உயர்கல்வி படித்த கார்த்தி சினிமாவில் இறங்குவது என முடிவான பின் மணிரத்னமிடம் அசிஸ்டென்ட் டைரக்டராகப் பணியாற்றினார். பிறகு நடிக்க முடிவு செய்ததும் முதல் அடியை வைக்கும்போதே ஒரு தரமான படைப்பின் மூலம் தான் தன் வருகையைத் தெரிவித்தார்.யுவனின் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெகுவாக பாராட்டப்பட்டன. நடிகர், நடிகைகளுக்கும், படக்குழுவினருக்கும் நல்ல வெற்றியைக் கொடுத்த இந்தப் படத்தை ரசிகர்களைப் போலவே அவர்களாலும் நிச்சயம் எப்போதும் மறந்துவிட முடியாது. பருத்திவீரன் டே வாழ்த்துகள் கார்த்தி!


Actor Karthi is happy with the success of the film recently, 'Theeran adhigaram Ondru'. Karthi's movie career started with the film 'Paruthiveeran'. The massive hit paruthiveeran was released on this day 11 years ago.